யார் மனசுல யாரு ? நிஜ சீரியல் சண்டை..! மகாவுக்கு தூதுவிடும் அணில்

0 643

டிவி சீரியல்களில் சண்டையிட்டு கொள்வதை போல நிஜத்திலும் சின்னத்திரை நட்சத்திரங்களான ஜெய்ஸ்ரீ, மகாலெட்சுமி குடும்பத்தினர் சண்டையிட்டு வருகின்றனர். முன்பு அவர்கள் டிக்டாக்கில் நடித்ததன் நிஜமான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

ஒரு குழந்தை இருந்த நிலையில் ஜெய்ஸ்ரீயை மணந்து கொண்ட ஈஸ்வரின் குடும்ப வாழ்க்கையில் மற்றொரு சீரியல் நடிகையான மகாலெட்சுமி நுழைந்ததால் புயல் வீசதொடங்கியதாக குற்றஞ்சாட்டினார் ஜெய்ஸ்ரீ..

இதையடுத்து ஈஸ்வர் போதையில் மனைவி ஜெய்ஸ்ரீயை அடித்து உதைப்பதாக அளிக்கப்பட்ட புகாரில் அண்மையில் கைதாகி ஈஸ்வர் ஜெயிலுக்கு சென்ற நேரத்தில் ஜெய்ஸ்ரீ அவரை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்க, ஈஸ்வர் ஜெயிலில் இருந்து வெளியில் வந்ததும் பதிலடியாக தன் மனைவிக்கும் , மகாலெட்சுமியின் கணவனுக்கும் தொடர்பு இருப்பதாக குடும்ப கதையில் டுவிஸ்ட் வைத்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மகாலெட்சுமியின் கணவர் அனில்குமார், 6 மாதமாக தனக்கும் மனைவி மகாலட்சுமிக்கும் பேச்சுவர்த்தையே இல்லை என்றும் அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் மனம் திறந்துள்ளார். அனில்குமார் அளித்த பேட்டியின் மூலம் மகாலெட்சுமி கணவனை பிரிந்து தனித்து இயங்குவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சில டிவி சீரியல்களில் தான் இது போன்ற குடும்ப சண்டைகள் பிரபலம், இவர்கள் சீரியலில் நடிப்புக்காக போட்ட சண்டையை தற்போது மீடியாக்கள் முன்பு நிஜமாகவே போட்டு வருகின்றனர்.

தங்கள் குடும்பத்திலும் இப்படியெல்லாம் நடக்கும் என்று முன் கூட்டியே தெரிந்து தான் ஈஸ்வர் தனக்கு தானே டிக்டாக் மூலம் புத்தி சொல்லி இருக்கிறார் போல என்கின்றனர் சின்னதிரை ரசிகர்கள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments