மராட்டிய மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மாற்றப்பட உள்ளதாக தகவல்

0 339

மராட்டிய மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மராட்டியத்தில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் கோஷ்யாரி பரிந்துரைத்தார்.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டதுடன், முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆனால் நான்கே நாட்களில் பட்னாவிஸ் பதவி விலகினார். இதனால் கோஷ்யாரி மீதான விமர்சனம் அதிகரித்துள்ளது. எனவே, பகத்சிங் கோஷ்யாரியை மாற்றிவிட்டு, மராட்டிய மாநில ஆளுநராக தற்போது ராஜஸ்தான் ஆளுநராக உள்ள கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments