இந்திய கிரிக்கெட் அணியினர் இளம்சிவப்பு நிற பந்தில் பயிற்சி

0 447

வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியினர், இளம்சிவப்பு நிற (பிங்க்) பந்தில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்தியா, வங்கதேசம் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் விரைவில் தொடங்குகிறது.

இதில் முதல் போட்டி, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 14ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து கொல்கத்தாவில் 2ஆவது போட்டி பகலிரவு நேரமாக 22ம் தேதி தொடங்குகிறது.

இப்போட்டி இந்தியா விளையாடும் முதல் பகலிரவு போட்டியாகும். இதில் இளம் சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்பட இருக்கிறது. இதனால் இந்திய அணியினர் இளம்சிவப்பு நிற பந்தில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments