அமைச்சர் கே.சி வீரமணி மீதான புகார் -விசாரணைக்கு உகந்தது அல்ல என தமிழக அரசு தரப்பில் வாதம்

0 228

அமைச்சர் கே.சி வீரமணி மீதான புகார் தொடர்பாக விதிகளை பின்பற்றாமல் உயர் நீதிமன்றத்தில் நேரடியாக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தமிழக அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், வட வேலூர் கிராமத்தில் தனது குத்தகையின் கீழ் இருந்த 7 ஏக்கர் நிலத்தை, அமைச்சர், ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி ஆகியோர் கையகப்படுத்த முயற்சிப்பதாக மனுவில் கூறியுள்ளார்.

விசாரணையில் ஆஜரான அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் நடராஜன், ஒரு புகாரை நேரடியாக காவல்நிலையத்தில் அளித்து, அதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்றார்.

அதன் பின்னர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் எனவும், அதன் பிறகே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி அவர் வாதிட்டார். எனவே இந்த வழக்கு விசாரணைக்கே உகந்ததல்ல எனவும் வாதிட்டார்.

தொடர்ந்து, மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்ட மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளரின் அறிக்கையை பதிவு செய்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments