கடலோடு இசைத்த மோடி..! பிரதமரின் கவிதை தமிழில்....

0 742

மாமல்லபுரத்து கடற்கரை நினைவுகளை இந்தியில் கவிதையாக வெளிப்படுத்தியிருந்த பிரதமர் மோடி, அதனைத் தற்போது தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்....

சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பிற்காக கடந்த 11 ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடி, கோவளத்தில் கடற்கரையோரமுள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். மாமல்லபுரத்துக் கடலோரம் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், வந்து வந்து போகும் அலைகளில் கால் நனைத்துக் கடலோடு உரையாடியதைக் கவிதையாக வடித்திருந்தார். இந்தியில் வந்த அந்தக் கவிதையை தமிழரும் பருக மொழியாக்கம் செய்து டுவிட்டரில் பதிந்துள்ளார் பிரதமர்... இதோ கடலோடு இசைத்த அந்தக் கவிதை..

அலைகடலே
அடியேனின் வணக்கம்

அளப்பறிய, முடிவற்ற,
ஒப்பில்லாத வர்ணனைகளைக் கடந்த
நீலக் கடலே...
உலகிற்கு உயிரளிக்கும் நீ
பொறுமையின் இலக்கணம்
ஆழத்தின் உறைவிடம்.

image

வெளித்தோற்றத்திற்கு
கோபமாய், வீரத்துடன்
பேரிரைச்சலோடு எழும் அலைகள் -
உன்வலியா? வேதனையா?
துயரமா? எதன்வெளிப்பாடு?

இருந்த போதிலும் உன்னை
கலக்கமின்றி, தடுமாற்றமின்றி
உறுதியுடன் நிற்கச் செய்கிறது
உன் ஆழம்.

உன்னிடம் உள்ளது
எல்லையில்லாத வலிமை.
முடிவில்லாத சக்தி - ஆனாலும்
பணிதலின் பெருமையை
நிமிடந்தோறும் நவில்கிறாய் - நீ
கரையைக் கடக்காமல்
கண்ணியத்தை இழக்காமல்.

கல்வித் தந்தையாய்
ஞான குருவாய்

வாழ்க்கைப் பாடத்தை
போதிக்கிறாய் நீ
புகழுக்கு ஏங்காத,
புகழிடத்தை நாடாத
பலனை எதிர்நோக்காத
உன் பயணம் தரும் பாடங்கள் ஏராளம்

நிற்காமல், சளைக்காமல்
வீசும் உன் பேரலைகள்
'முன்னேறுவதே வாழ்க்கை' என்ற
உபதேச மந்திரத்தை உணர்த்தும்
முடிவில்லாத பயணமே
முழுமையான உன் போதணை

விழும் அலைகளிலிருந்து
மீண்டும் எழும் அலைகள்
மறைந்து
மீண்டும் துவங்கும் உதயம்
பிறப்பு - இறப்பு என்பது தொடர் வட்டம்
உனக்குள் மடிந்து - பின்
உயிர்த்தெழும் அலைகள்
மறுபிறப்பின்
உணர்வூட்டம்

பழம்பெரும் உறவான
சூரியனால் புடமிட்ட
தன்னையழித்து,
விண்ணைத் தொட்டு
கதிரவனை முத்தமிட்டு
மழையாய் பொழிந்து

நீர்நிலைகளாய், சோலைகளாய்
மகிழ்ச்சி மணம் பரப்பி
படைப்பை அலங்கரித்து - எல்லோருக்கும்
வாழ்வளிக்கும் நீர் நீ

வாழ்வின் பேரழகு நீ -
விஷத்தை அடக்கிய
நீலகண்டன் போல் - நீயும்
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டு
புது வாழ்வைப்
பிறர்க்களித்து
சொல்கிறாய்
சிறந்த வாழ்வின்
மறைபொருளை !

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments