தாய் நாய் நடத்திய பாசப்போராட்டம்..!

0 1759

வடமாநிலம் ஒன்றில் கட்டட இடிபாடுகளுக்கு நடுவே சிக்கிய குட்டிகளை மீட்க தாய் நாய் ஒன்று நடத்திய போராட்டம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அனிமல் எய்ட் அன்லிமிட்டட் (Animal Aid Unlimited) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில், வடமாநிலம் ஒன்றில் சிறிய வீட்டுக்குள் நாய் ஒன்று சில குட்டிகளை ஈன்றுள்ளது. திடீரென அந்த வீடு இடிந்து விழுந்ததில் குட்டிகள் அனைத்தும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டன. இதனைக் கண்ட தாய் நாய், முனங்கிக் கொண்டே குட்டிகளை மீட்க மண்ணைத் தோண்டி பெருமுயற்சி மேற்கொண்டது.

இதுகுறித்து தகவலறிந்த அனிமல் எய்ட் அன்லிமிட்டட் அமைப்பினர் குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் நாய் குட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் குட்டிகளைப் பார்ப்பதற்காக தாய் நாயும் சேர்ந்து குழி தோண்டியது பார்ப்பவரின் கண்களை ஈரமாக்கியது.

குறிப்பிட்ட அளவு தோண்டிய பின் இடிபாடுகளுக்கு இடையே குட்டிகளின் கதறல் சப்தம் கேட்ட தாய்க்கு, இருப்புக் கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து தோண்டும் பணியை விரைவு படுத்திய அனிமல் எய்ட் அமைப்பினர் இடிபாடுகளில் சிக்கிய 2 குட்டிகளை உயிருடன் மீட்டனர். சிக்கலான இடத்தில் நாய்க்குட்டிகளை மீட்ட இளைஞர் குழுவை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments