ஏர் இந்தியா விமானத்திற்கு எரிபொருள் சப்ளை நிறுத்தம் - விமான நிலையத்தில் 4 மணி நேரம் பயணிகள் தவிப்பு

ஏர் இந்தியா விமானத்திற்கு எரிபொருள் சப்ளை நிறுத்தம் செய்யப்பட்டதால், கொச்சி விமான நிலையத்தில் 4 மணி நேரம் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.
300 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட அந்த விமானம் தயாராக இருந்த நிலையில், எரிபொருள் சப்ளை செய்யாததால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த பயணிகள் பத்தனம்திட்டா எம்.பி.க்கு புகார் தெரிவித்ததை அடுத்து, விமானப் போக்குவரத்து அமைச்சர் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் அவர் தொடர்பு கொண்டு பேசினார்.
2 மத்திய அமைச்சர்களின் அறிவுறுத்தலின் பேரில் எரிபொருள் பிரச்னை தீர்க்கப்பட்டு 4 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம், 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை 7 மாதங்களாக செலுத்தாததால் சில விமான நிலையங்களில் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments