அமெரிக்க அதிநவீன ரோந்துக்கப்பல் பயிற்சிக்காக சென்னையில் முகாம்

0 434

சென்னைக்கு அருகே, நடுக்கடலில், இந்திய-அமெரிக்க கடலோர காவல்படையினரின், கூட்டுப் பயிற்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, அமெரிக்க கடலோர காவல்படையின் அதிநவீன ரோந்துக் கப்பல், சென்னைக்கு வந்துள்ளது. அதுகுறித்த செய்தித்தொகுப்பு.

image

இந்திய-அமெரிக்க கடலோர காவல்படையினருக்கு இடையேயான ஒப்பந்தபடி, குறிப்பிட்ட கால இடைவெளிகளில், ஒன்றாக இணைந்து கூட்டுப் பயிற்சி மற்றும் போர் ஒத்திகையில் ஈடுபடுவது வழக்கம். இந்த வகையில், இந்திய-அமெரிக்க நாடுகளின், கடலோர காவல்படையினரின் கூட்டுப் பயிற்சி, சென்னை அருகே வங்கக்கடல் பரப்பில், இன்று தொடங்கி, வருகிற 27ஆம் தேதி வரை முன்னெடுக்கப்படுகிறது. இதையொட்டி, அமெரிக்க கடலோர காவல்படையின் அதிநவீன ரோந்துக்கப்பல்களில் ஒன்றான, கட்டர் ஸ்ட்ராட்டன், சென்னை துறைமுகத்திற்கு இன்று வந்தடைந்தது. இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய தளபதி பரமேஸ்வரன் தலைமையில், அதிகாரிகளும், மாணவர்களும் இணைந்து தேசிய கொடிகளை அசைத்தும், இசைக்கருவிகளை வாசித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

image

மேலும் இந்திய கடலோர காவல்படை ரோந்து கப்பலான சவுரியா மற்றும் 2 சிறிய கப்பல்கள் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்றுள்ளன. கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வணிக கப்பலை மீட்பது, தீ விபத்தில் சிக்கும் கப்பலில் தீயை அணைத்து மாலுமிகளை காப்பாற்றுவது, அசாதாரண சூழலில் மீனவர்களை காப்பாற்றுவது உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். இதுகுறித்துப் பேசிய அமெரிக்க கடலோர காவல்படை ரோந்துக்கப்பலின் கேப்டன் பாப் லிட்டில், இந்திய கடலோர காவல்படையுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

image

சென்னையில் முகாமிட்டுள்ள அமெரிக்க கடலோர காவல்படையின், கட்டர் ஸ்ட்ராட்டன், 2009ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவிட் மனைவி மிச்சேல் ஒபாமாவால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இக்கப்பல், அதிவேகத்தில் செல்லக்கூடிய இலகு ரக ரோந்துக்கப்பலாக வர்ணிக்கப்படுகிறது. 43 மீட்டர் உயரமும் 127 மீட்டர் நீளமும் கொண்டது.

image

அமெரிக்கா கடலோர காவல்படையின் ரோந்தில் பங்கேற்று, இதுவரை, 60,000 கிலோ கொக்கைன் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளது.. வான்-கடல்-தரை என மூன்று வழியாக வரும் எதிரிகளை கண்டறியும் ரேடார் நுட்பத்தை கொண்டது. எதிரிநாட்டு நீர்மூழ்கி கப்பல் மூலம் ஏவப்படும் ஏவுகணை தடுத்தாளும், டீக்காய் என்ற அதிநவீன தொழில்நுட்பமும், அமெரிக்காவின் கட்டர் ஸ்ட்ராட்டன் ரோந்துக்கப்பலில் பயன்படுத்தப்படுகிறது.

image

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments