RECENT NEWS

"எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார்" - ரஷ்ய அதிபர்

"எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார்" - ரஷ்ய அதிபர்

Apr 27, 2025

"எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார்" - ரஷ்ய அதிபர்

"எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார்" - ரஷ்ய அதிபர்

Apr 27, 2025

முகப்பு

நிலநடுக்கத்தைக் கணித்த பாபா வாங்கா. . உலகின் முழு ஜாதகம் இதோ... (ஆண்டுவாரியாக)

Mar 30, 2025 10:18 AM

102

நிலநடுக்கத்தைக் கணித்த பாபா வாங்கா. . உலகின் முழு ஜாதகம் 
இதோ... (ஆண்டுவாரியாக)

பாபா வாங்கா : உலகின் முழு ஜாதகம் இதோ... (ஆண்டுவாரியாக)

ஒட்டுமொத்த உலகத்துக்கே ஜாதகம் எழுதிவைத்துவிட்டுச் சென்ற பாபா வாங்கா தற்போது நடந்த இந்த நிலநடுக்கத்தையும் கணித்திருக்கிறார். . அவரது தீர்க்க தரிசனப்படி அடுத்த 3000 ஆண்டுகளில் இந்த பூமியை என்ன செய்யக் காத்திருக்கிறது இயற்கை? ஆண்டு வாரியாக உள்ள இந்த அரிய செய்தித் தொகுப்பைத் பார்க்கலாம். .

12 வயசுல புயல், மின்னலால 2 கண்லயுமே பார்வை பறிபோனாலும், ஞானக்கண் திறந்தது பாபா வாங்காவுக்கு. .

ஸ்டீல் பேர்ட்ஸ் தாக்கும் என கணித்தது போன்றே அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது.

ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த உடையணிந்த உலகின் முக்கிய பெண் தலைமை தோட்டாவால் கொல்லப்படுவார் என்று பாபா வாங்கா சொன்னது போன்றே இந்திரா காந்தி சுடப்பட்டார்.

டயானா மரணம், இந்தியப் பெருங்கடல் சுனாமி, கருப்பினத்தவரான ஒபாமா அமெரிக்காவின் 44-வது அதிபராவது என அவர் கணித்ததெல்லாம் நடந்தது தெரியும். தனது இறப்புத் தேதி ஆகஸ்ட் 11, 1996-ல் நடக்கும் என அவர் கணித்ததும் நடந்தது. . . .

அதேபோல் 2025-ல் என்ன நடக்கும் என அவர் கணித்தவற்றில் ஒன்றுதான் நிலநடுக்கம்..

2025-ல் உலகின் பல பகுதிகளில் நிலநடுக்கமும், வெள்ளமும் ஏற்படும் எனக் கணித்திருக்கிறார்.

அவர் சொன்னது போன்றே மியான்மரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிலநடுக்கத்துக்கு பலியாகியிருக்கின்றனர்.

அந்த நிலநடுக்கமானது தாய்லாந்திலும், சீனாவிலும் கூட உணரப்பட்டது. அதைத் தொடந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இன்னும் உலகின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும் என்கிறார் அந்த தீர்க்கதரிசி...

இதேபோல் பாபா வாங்கா அடுத்த 3000 ஆண்டுகள் கணித்ததன்படி என்ன நடக்கும்? என்ற உலக ஜாதகத்தைப் பார்க்கலாம்.

((Spl Gfx in))

ஆண்டு கணிப்பு

2025 ஐரோப்பாவில் போர். கிழக்கிடம் மேற்கு தோற்று EU வாழ அரிதானதாகும்

2028 புது மின்சக்தி கண்டுபிடிக்கப்படும், பசி ஒழியும், வீனஸ் செல்வான் மனிதன்

2043 ஐரோப்பியாவில் இஸ்லாமியப் பெரும்பான்மை ஏற்படும்

2046 மனித மாற்று உறுப்புக்கள் ஆய்வகங்களில் சிந்தட்டிக்கில் உருவாகும்

2066 சுற்றுச்சூழலை மறுகட்டமைக்கும் ஆயுதத்தை US உருவாக்கும்

2076 சமூகத்தில் சாதி முறை ஒழியும்

2086 இயற்கை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும்

2088 மனிதர்களுக்கு விரைவில் முதுமையாகும் வைரஸ் தாக்கும்

2097 முதுமையாக்கும் வைரஸ் ஒழிக்கப்படும்

2100 ஓர் செயற்கைச் சூரியன் உலகின் இருள் பகுதியை சூடாக்கும்

2111 மனிதர்களிடையே ரோபோக்கள் அதிகரிக்கும்

2125 பாபா வாங்கா ஹங்கேரியில் மறு ஜென்மம் எடுப்பார்

2154 விலங்குகள் மனிதர்களைப் போல் மாறும்

2167 புதிய மதம் உலகில் பிரபலமாகும்

2170 பூமி வறண்ட பாலைவனமாகும்

2183 செவ்வாய் கிரகத்தில் காலனி அமைத்து தலைமைக்காக போராட்டம் நடக்கும்

2187 எரிமலைகள் முற்றிலுமாக செயலிழக்கப்படும்

2201 சூரியன் குளிரும், பருவநிலை பெரும் மாற்றமடையும்

2221 வேற்றுகிரக வாசிகளின் உண்மை முகம் மனிதர்களை மிரட்டும்

2256 பூமிக்குத் திரும்பிவரும் ராக்கெட்டால் புது வைரஸ் பரவும்

2262 செவ்வாய் கிரகத்தில் விண்கல் மோதும் அபாயம்

2288 டைம் டிராவல் சாத்தியமாகி வேற்றுகிரகவாசிகளோடு மனிதன் பேசுவான்

2291 சூரியன் மேலும் குளிர்வடையும், அதை சூடாக்க மனிதன் முயல்வான்

2296 சூரிய ஒளி, புவி ஈர்ப்பால் சேட்டிலைட்கள் தரையில் மோதும்

2304 நிலவை இன்னும் தீவிரமாக ஆய்வு செய்வான் மனிதன்

2341 விண்வெளிக்கு அப்பாற்பட்ட சக்தியால் பூமிக்கு ஆபத்து

2354 தண்ணீர் பஞ்சம் அதிகரிக்கும்

2371 உலகளவில் பஞ்சம், பட்டினி ஏற்படும்

2378 புதிய மனித இனம் உருவாகும்

2480 இரு செயற்கைச் சூரியன்கள் மோதி உலகம் இருளும்

3005 செவ்வாய் கிரகத்தில் போர் நடக்கும்

3010 நிலவில் விண்கல் மோதி புழுதி மேகமாகப் படியும்

3797 ஜீவராசிகள் மடியும், சூரியக் குடும்பத்தில் புது கோள் உருவாக்கப்படும்

3854 நாகரீக வளர்ச்சியின்றி, மீண்டும் பழங்குடியாவான் மனிதன்

4308 மூளையில் மரபணு மாறுபாட்டால் சுயநலமாவான் மனிதன்

4509 கடவுளோடு தொடர்பு ஏற்படும்

4599 இறப்பின்மை அதிகரித்து, பூமி மனிதர்களால் நிறையும்

5076 பிரபஞ்சத்தின் எல்லை கண்டறியப்படும்

5078 பிரபஞ்சத்தை விட்டு வெளியேற மனிதன் முயல்வான் ; 40% பேர் மறுப்பர்

5079 உலகம் அழியும்.....................! ((Spl Gfx out))

இவையெல்லாம் பாபா வாங்காவின் 14000 கணிப்புக்களில் சில மட்டுமே. இவை அனைத்தும் உண்மையா? எதேர்ச்சையாக நடக்கிறதா? என கேள்வி எழுந்தது.

அதற்கு பதிலாக அவரது கணிப்பில் இதுவரை 85 % வெற்றிகரமாக மெய்யானதாகக் கூறி அதிர்ச்சியூட்டுகின்னர் ஆய்வாளர்கள். .

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies