விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம முறையில் உயிரிழப்பு..

0 603

புதுக்கோட்டையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி நேரில் விசாரணை நடத்திய நிலையில், அந்த இளைஞர் போதை ஊசி பயன்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சாந்தனாதபுரத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் உள்பட நண்பர்கள் 13 பேர் போதை ஊசி, மாத்திரைகளை பயன்படுத்தியதாக , நேற்று முன்தினம் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்ட விக்னேஸ்வரன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், ஆலங்குடி சார்பு நீதிமன்ற நீதிபதி  விஜய பாரதி, விக்னேஸ்வரன் உடல் வைக்கப்பட்ட அரசு மருத்துவமனை பிணவறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments