தேவாலய நில மோசடி வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம் - மதுரை உயர்நீதிமன்றம்
ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காக வழங்கப்பட்ட, 31 ஏக்கர் நிலத்தை மதுரை-ராமநாதபுரம் திருமண்டல சி.எஸ்.ஐ. நிர்வாகம் விற்பனை செய்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தல்லாகுளத்தில் உள்ள நிலத்தை அரசு அதிகாரிகளின் உதவியோடு திருமண்டல நிர்வாகிகள் விற்பனை செய்துள்ளதாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தேவசகாயம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 31ஏக்கர் நிலமும் தற்போது வரையில் அரசுக்கு சொந்தமானதாகவே உள்ளதால், அதனை கிரயம் செய்து கொடுப்பதற்கு கிறிஸ்தவ அமைப்புக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.
Comments