அளவுக்கு மிஞ்சினால் உடல் பயிற்சியும் உயிருக்கு ஆபத்து தான்..! ஜிம் மாஸ்டரின் கடைசி வீடியோ..

0 1775

இன்னும் சில நிமிடங்களில் தனது இதயத்துடிப்பு நிற்கப்போகிறது என்பதை அறியாமல் வெறித்தனமாக ஜிம் மாஸ்டர் மஹாதீர்மகமுத் உடற்பயிற்சி செய்த காட்சிகள் தான் இவை..!

சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த 36 வயதான ஜிம் மாஸ்டர் மஹாதீர்மகமுத். சொந்தமாக ஜிம் நடத்தி வந்த இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு ஜிம்மிற்கு சென்றவர் நீண்டநேரம் வெளியில் வரவில்லை . சந்தேகம் அடைந்த குடும்பத்தினர்கள் ஜிம்மிற்கு சென்று பார்த்தனர்.

அங்கு குளியலறையில் மஹாதீர்மகமுத் மூர்ச்சையாகி அசைவற்று கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மஹாதீர்மகமுத் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


பின்னர் சடலம் அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மஹாதீர்மகமுத் மாரடைப்பில் இறந்ததால் போலீசார் வழக்கு ஏதும் பதிவுசெய்யவில்லை. தனது மகனுக்கு ஏற்கனவே பிரசர் அதிகம் இருந்ததாக தெரிவித்த அவரது தாய் குல்ஜார், அவனிடம் அதிகம் உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என தெரிவித்திருந்தேன். அதீத உடற்பயிற்சியால் தனது மகன் மாரடைப்பில் இறந்து விட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இறந்த மஹாதீர்மகமுத் சேலம் 31-வதுவார்டு முன்னாள் திமுக செயலாளர் மகமுத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments