5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் கீழ் 20 லட்சம் வரை மோசடி.!

0 1707

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில்  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் 20 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கடியாபட்டியில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அரிமளம், கீழாநிலை, இராயவரம், ஏம்பல் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக போலி ஆவணம் தயாரித்து முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சுமார் 30 பேரின் வங்கிக்கணக்கில் இந்தப்பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது சிறப்பு தணிக்கை அதிகாரிகள்  ஆய்வில் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments