தனியார் பள்ளி விடுதியில் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை... பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

0 544

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருஈங்கோய்மலையிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த 15 வயது மாணவி ஒருவர், விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், மாணவியின் உடல் வைக்கப்பட்டிருந்த முசிறி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேர்வில் காப்பி அடித்ததை ஆசிரியர் பார்த்துவிட்டதால், அச்சம் காரணமாக அந்த மாணவி மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே திருச்சி மற்றும் தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அவ்வவழியாகச் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை போலீசார் மாற்றுப் பாதையில் அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments