சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் கன்னட நடிகர் தர்ஷன்.. வெளியான புகைப்படங்கள்..!
ரசிகரை கொலை செய்த வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன், சிறை வளாகத்தில் ரவுடிகளுடன் அமர்ந்து காஃபி குடிப்பது, சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, தர்ஷனை வேறு சிறைக்கு மாற்றவும், சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை கூடுதல் ஐ.ஜிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments