தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
போக்குவரத்திற்கு இடையூறாக சாலை, தெருக்களில் நீண்ட நாட்களாக நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்களை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
கடந்த இரண்டு நாட்களில் 85 வாகனங்கள் உட்பட இதுவரை 816 வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளன. சாலையோரங்களில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்றப்படுவதுடன், காவல்துறையிடம் என்ஓசி பெற்ற பிறகு அவ்வாகனங்கள் ஏலம் விடப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
Comments