நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
திருப்பதியில் விருப்பமில்லாத திருமணத்தால் நேர்ந்த சோகம்... அண்ணனின் மனைவி, 2 மகள்களைக் கொன்றுவிட்டு தம்பி தற்கொலை
தனக்கு விருப்பமில்லாத பெண்ணைத் திருமணம் செய்துவைத்த ஆத்திரத்தில் அண்ணனின் மனைவி மற்றும் 2 பிள்ளைகளைக் கொலை செய்த தம்பி, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பதியில் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள முனிரெட்டி நகரைச் சேர்ந்த தாஸ் என்பவரும் மோகன் என்பவரும் அண்ணன், தம்பிகள். தாஸ் தனது தம்பி மோகனுக்கு அவரது விருப்பமின்றி பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்ததாகக் கூறப்படும் நிலையில், ஒரே ஆண்டில் இருவரும் பிரிந்துள்ளனர்.
தனது வாழ்க்கை நாசமாகிவிட்ட நிலையில், அண்ணன்தாஸ் மட்டும் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்த மோகன், அவர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்குச் சென்று தனது அண்ணி மற்றும் அவர்களது 2 மகள்களை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார். பிறகு தாமும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Comments