தேசத்தை பிளவுபடுத்தும் வதந்திகளை காங்கிரஸ் தொடர்ந்து பரப்பி வருவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு

0 412

தேசத்தை பிளவுபடுத்தும் வதந்திகளை காங்கிரஸ் தொடர்ந்து பரப்பி வருவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சி எம்.பிக்களின் அமளிக்கு இடையே குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி, 3-வது முறையாக தேர்தெடுக்கப்பட்டுள்ள தாங்கள், 3 மடங்கு வேகத்துடன் செயல்படப் போவதாக கூறினார்.

தாங்கள் திறம்பட பணியாற்றியது மக்களுக்கு தெரியும் என்பதால் தான் மக்கள் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பளித்ததாக குறிப்பிட்ட பிரதமர், எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தான் காங்கிரஸ் கட்சிக்கு  வாக்களித்துள்ளதாக தெரிவித்தார்.

ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்து பிரதமர் குட்டிக்கதை ஒன்றையும் கூறினார். சிறுவன் ஒருவன் தான் 99 மதிப்பெண்கள் பெற்று விட்டதாக மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிந்ததாகவும், அவன் பெற்றது 100-க்கு 99 மதிப்பெண்கள் அல்ல 543-க்கு 99 மதிப்பெண் தான் என்பதை சிறுவனின் புத்திக்கு யார் புரிய வைக்க முடியும் என்றும் பிரதமர் ராகுலை சூசகமாக சாடினார்.

இந்திய மக்கள் மீது சர்வாதிகாரத்தை வலுக்கட்டாயமாக திணித்தது காங்கிரஸ் என்று தெரிவித்த பிரதமர், அக்கட்சியின் நோக்கங்கள் ஆபத்தானவை என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments