தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
தேனி மாவட்டம் போடி அருகே ஊர் பஞ்சாயத்தில் விதிக்கப்பட்ட தண்டனைத் தொகையை உரிய நேரத்தில் தராத நபரை திட்டி தற்கொலைக்கு தூண்டியதாக பெண் உள்ளிட்ட 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தேனி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போடியை அடுத்த சங்கராபுரத்தில் தகராறு ஒன்றில் செல்லதுரை என்பவர் முத்துப்பாண்டி என்பவரை தள்ளி விட்டதாகவும், அதில் காயமடைந்த முத்துப்பாண்டிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தருமாறு ஊர் பஞ்சாயத்தில் செல்லதுரைக்கு உத்தரவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முதல் தவணையாக 40 ஆயிரம் ரூபாயை செலுத்திய செல்லதுரை உரிய நேரத்தில் எஞ்சிய தொகையை தராததால் முத்துப்பாண்டி, அவரது மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் அவதூறாக பேசியதால் செல்லத்துறை தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு தொடுக்கப்பட்டது.
Comments