பேரறிஞர் அண்ணாவின் 55ஆவது நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மரியாதை செலுத்தினர்

0 345

பேரறிஞர் அண்ணாவின் 55ஆவது நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் அவரது உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரத்தில் உள்ள நினைவு இல்லத்தில் அவரது உருவச்சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

 

நாமக்கல்லில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் தலைமையில் தி.மு.கவினர் அமைதி ஊர்வலம் நடத்தி அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா உருவச்சிலைக்கு தி.மு.க சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.க தலைவர் கி.வீரமணி பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அண்ணாவின் உருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

 

நாகர்கோவில் வடசேரி பகுதியில் அமைந்துள்ள அண்ணா உருவச் சிலைக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் தி.மு.கவினர் மரியாதை செலுத்தினர்

 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அண்ணாவின் உருவப்படத்திற்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments