காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து 150 கன அடி தண்ணீர் திறப்பு... அமைச்சர் முத்துசாமி, ஈஸ்வரன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்

0 596

காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வசதிக்காக அமைச்சர் முத்துசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னர் பேட்டியளித்த அமைச்சர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23ந்தேதி வரை தொடர்ந்து காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகளின் போது சில இடங்களுக்கு அமைச்சர்கள் போகாததற்கு, அந்தப் பகுதிக்கு செல்ல முடியாத நிலை இருந்ததே காரணம் என்று அவர் கூறினார்.

பாதிப்புகளை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments