அய்யோ மாமா... என்னை அடிச்சிப் போட்டுட்டு.. சர்மிளாவை தூக்கிட்டு போயிட்டாங்க பாவிங்க..! உறவுக்காரன கூட நம்ப முடியவில்லையே..

0 2826

தன்னை நம்பி அனுப்பிய பெண்ணை ஏரிக்கரைக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விட்டு யாரோ மர்ம நபர்கள் அப்பெண்ணை கடத்திச் சென்றுவிட்டதாக நாடகமாடிய நபர் போலீசாரிடம் சிக்கியுள்ளான்.

தஞ்சை மாவட்டம் கொசுவம்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் சர்மிளா. 22 வயதான சர்மிளா தாய் தந்தையை இழந்தவர் என்பவதால் தாய் மாமன் பிரபு பராமரிப்பில் வளர்ந்து சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

தீபாவளிக்காக ஊருக்கு வந்த சர்மிளாவை, தாய் மாமா பிரபு 17ஆம் தேதி உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்து சென்று உள்ளார். மாலை வீடு திரும்பும் போது பிரபு தனது வீட்டின் அருகில் உள்ள உறவினரான 33 வயதான கருப்பசாமி என்ற திருமணமான இளைஞரிடம் சர்மிளாவை அழைத்துச்சென்று வீட்டில் விடுமாறு கூறி உள்ளார்.

கருப்பசாமி தனது இருசக்கர வாகனத்தில் சர்மிளாவை அழைத்துச்சென்ற நிலையில் அவர்கள் இருவரும் வீட்டிற்கு செல்லவில்லை என்ற தகவல் அறிந்து தாய்மாமன் பிரபு, கருப்பசாமியின் செல்போனில் தொடர்பு கொண்டு எந்த இடத்தில் வருவதாக கேட்டுள்ளார். பக்கத்தில் வந்து விட்டதாக கருப்பசாமி கூறியுள்ளார்.

நேரம் நீண்டு கொண்டே சென்ற நிலையில் அவர்கள் வீட்டுக்கு வராததால் பிரபு மீண்டும் கருப்பசாமி செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. சர்மிளா செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அச்சம் அடைந்த பிரபு தனது குடும்பத்தினர் உறவினர்களுடன் சேர்ந்து சாலை நோக்கி வந்துள்ளனர்.

அப்போது கருப்பசாமி தனியாக நின்று அழுது கொண்டு இருப்பதை கண்டு சர்மிளா எங்கே என கேட்ட போது, ஐயோ மாமா, எங்களை வழி மறித்த இரண்டு பேர் என்னை தாக்கிவிட்டு சர்மிளாவை கடத்தி போய்விட்டனர் எனக்கூறி கதறி அழுதுள்ளார்.

உறவினர்கள் நண்பர்கள் எல்லாம் விடிய விடிய பல இடங்களிலும் தேடியும் சர்மிளா கிடைக்காத நிலையில், மறுநாள் காலை முதலை முத்துவாரி ஏரியில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து பிரபு அங்கு சென்று பார்த்தபோது, அங்கு தனது அக்கா மகள் சர்மிளா சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் காவல்துறையினர் சர்மிளா உடலை கைப்பற்றி கருப்பசாமியிடம் சிறப்பான கவனிப்புடன் விசாரணை நடத்திய போது சர்மிளா மாயமான மர்மம் விலகியது.

சர்மிளாவை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் காட்டு பகுதிக்குள் கடத்தி சென்ற கருப்பசாமி முதலை முத்துவாரி ஏரியில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும். சர்மிளா தன்னை காட்டி கொடுத்து விடுவார் என்ற பயத்தில் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, சடலத்தை ஏரியில் வீசிவிட்டு, இரண்டு பேர் கடத்தி சென்றதாக நாடகம் ஆடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து, கருப்பசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான கருப்பசாமிக்கு ஒரண்டாக்கு முன்னர்தான் திருமணம் நடந்துள்ளது. 5 மாதத்தில் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. நெருங்கிய பக்கத்து வீட்டில் வசிப்பவராக இருந்தாலும், உறவினராக இருந்தாலும் பெண்களை நம்பி அனுப்பி வைக்க கூடாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments