உத்தரகாண்ட் சுரங்கத்துக்குள் 72 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் பணி தீவிரம்

0 2652

உத்தரகாண்ட் சுரங்கத்துக்குள் 72 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இடிபாடுகளுக்கு நடுவே பெரிய ஸ்டீல் பைப்பை செலுத்தி, அதன்வழியாக தொழிலாளர்களை மீட்க ட்ரில்லிங் செய்யும் பணி நேற்று நடந்து வந்தது.

ஆனால் இரவில் ஏற்பட்ட நிலச்சரிவால், ட்ரில்லிங் பணிகள் தடைபட்டன. இதையடுத்து டெல்லியிலிருந்து புதிய ட்ரில்லிங் இயந்திரம் வரவழைக்கப்பட்டு துளையிடும் பணிகள் காலையில் துவங்கின.

திட்டமிட்டபடி இப்பணிகள் தடையின்றி நடைபெற்றால், விரைவில் தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே விபத்து ஏற்பட்டு முழுவதும் 3 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், தொழிலாளர்களை மீட்க தாமதம் ஏற்படுவதை கண்டித்து சக தொழிலாளர்கள் சம்பவம் நடந்த இடத்தின் அருகே போராட்டம் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments