மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் கடத்தப்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் பரபரப்பு... மொபைல் இணையசேவைக்கு நவ.13 வரை தடை

0 1190

மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் கடத்தப்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் பரபரப்பு அதிகரித்துள்ளது. தலைநகர் இம்பாலின் மேற்குப் பகுதியில் நேற்று முன்தினம் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று குக்கி ஜோமி சமூகத்தைச் சேர்ந்த 5 பேரைக் கடத்திச் சென்றது.

இதில் ஒருவர் தப்பித்துள்ள நிலையில் மீதமுள்ள 4 பேரை வன்முறைக் கும்பல் இழுத்துச் சென்றுள்ளது. இந்த நிலையில் மலைப்பகுதிகளில் ஆயுதக் கும்பல் ஒன்று பாதுகாப்புப் படையினர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 காவலர்களும், 7 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.

வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மொபைல் இணையசேவைக்கான தடையை வரும் 13ம் தேதி வரை நீட்டித்து மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments