காஸாவை வட்டமிடும் ஆளில்லா அமெரிக்க டிரோன் விமானங்கள்.. பிணை கைதிகளை கண்டுபிடிக்க இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்கா..!

0 2152
காஸாவை வட்டமிடும் ஆளில்லா அமெரிக்க டிரோன் விமானங்கள்.. பிணை கைதிகளை கண்டுபிடிக்க இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்கா..!

காஸா மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் பறந்துவருவதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை கண்டுபிடிக்க MQ-9 Reaper டிரோன்களை பயன்படுத்திவருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

மணிக்கு 440 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த டிரோன் விமானத்தால் தொடர்ந்து 27 மணி நேரம் வானில் பறந்தபடி ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தக்கூடிய வல்லமை படைத்தது.

அதிலுள்ள அதிநவீன தெர்மல் சென்சார் கேமராக்கள் மூலம் 25 ஆயிரம் அடி உயரத்திலிருந்தபடி மனித உடலின் வெப்பத்தை வைத்து பிணை கைதிகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்து இஸ்ரேல் ராணுவத்திற்கு தகவல் அளிக்கும் என கூறப்படுகிறது.

ஒரு மணி நேரம் போர் விமானங்களை இயக்க ஆறரை லட்ச ரூபாய் செலவாகும் நிலையில், பாதி செலவில் இவற்றை இயக்கிவிடலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments