கர்நாடகாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது சுமோ கார் மோதல் 12 பேர் பலி, 3 பேர் படுகாயம்

0 2786

கர்நாடகாவில், நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் கலவை லாரி மீது டாடா சுமோ கார் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர்.

சிக்கபள்ளாபுரா பகுதியில் காலை நேரத்தில் நடைபெற்ற விபத்து குறித்து தகவலறிந்த போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டு 12 சடலங்களை மீட்டனர்.

படுகாயத்துடன் மீட்கப்பட்ட 3 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் ஆந்திராவின் கோரென்ட்லாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்த போலீஸார், காலையில் அப்பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவியதால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் கலவை லாரியின் பின்புறம் கார் மோதியிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments