இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் கோரிக்கை

0 815

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர்,  மின்சாரம், உணவு, எரிபொருள் ஆகியவற்றை தடை செய்து காசாவை முழுமையாக முற்றுகையிட, தனது படைகளுக்கு இஸ்ரேல் உத்தரவிட்ட விவகாரம் வேதனை அளிப்பதாக கூறினார். காசாவில் ஏற்கனவே மோசமாக இருந்த மனிதாபிமான நெருக்கடி நிலை, தற்போதைய சூழலில் மேலும் மோசடையும் என கவலை தெரிவித்தார்.

காசா பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி பாலஸ்தீனிய குடிமக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க, ஐக்கிய நாடுகள் சபையின் அணுகலை அனுமதிக்குமாறு அனைத்து தரப்பினரையும் அன்டோனியோ கட்ரஸ் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments