இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து அந்நாட்டின் தேசிய கொடி நிறத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய கட்டடங்கள் ஒளிரூட்டப்பட்டுள்ளன.

0 1067


இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து அந்நாட்டின் தேசிய கொடி நிறத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய கட்டடங்கள் ஒளிரூட்டப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, இஸ்ரேலிய கொடியின் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் ஒளிரூட்டப்பட்டுள்ளது. இதன் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுடன் அமெரிக்கா துணை நிற்கும் என்பதில் ஒருபோதும் மாற்றம் இருக்காது என்றார்.

பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான நம்பர் 10 டவுனிங் தெரு இல்லத்தின் முகப்பில் இஸ்ரேல் கொடி நிறம் ஒளிரூட்டப்பட்டுள்ளது. அதை பிரதமர் ரிஷி சுனக் பகிர்ந்துள்ளார்.

ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஈஃபிள் கோபுரத்தின் கீழ் ஒன்று கூடிய இஸ்ரேலிய மக்கள், தேசிய கொடியை கைகளில் ஏந்தி, தங்கள் நாட்டின் தேசிய கீதத்தை பாடினர்.

இதேபோல், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஒபாரா இல்லமும், ஜெர்மனியின் பெர்லினில் உள்ள பிராண்டன்பர்க் கேட் கட்டடமும் இஸ்ரேலிய கொடி வர்ணத்தில் ஒளிரூட்டப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments