2 சவரன் தங்க நகைகளே திருடுபோன நிலையில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் புகார் அளித்த பெண் கைது

0 9878

மன்னார்குடி அருகே இரண்டு சவரன் தங்க நகைகளே திருடுபோன நிலையில், நூறு சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் புகார் அளித்து நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார்.

நெடுவாக்கோட்டையை சேர்ந்த அருணாச்சலம் லாவண்யா தம்பதி, தாங்கள் வெளியே சென்றிருந்தபோது, பூட்டை உடைத்து, வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக மன்னார்குடி காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர்.

இதுகுறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், பிரபாகரன், ராஜமோகன், முத்து ஆனந்த் ஆகியோரை கைது செய்து விசாரித்ததில், இரண்டு சவரன் தங்க நகை, ஒரு வெள்ளி விளக்கு மற்றும் இரண்டு செல்போன்கள் மட்டுமே கொள்ளையடித்தாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து,  நடத்திய விசாரணையில்,லாவன்யா  காவல்துறையினரை உள்நோக்கத்துடன் வேண்டுமேன்றே ஏமாற்றி அலைகழித்தது விசாரனையில் தெரிய வந்ததால் அவர் மீது மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் . 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments