House wife-ஆக இருந்த மகளிரை House owner-ஆக மாற்றியிருக்கிறோம் - உதயநிதி ஸ்டாலின்

ஹவுஸ் ஒய்ஃபாக இருந்த மகளிரை ஹவுஸ் ஓனராக தமிழக அரசு மாற்றி இருப்பதாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் ஆறு இடங்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 557 கோடி ரூபாய் முதலீட்டில் 3033 வீடுகள் கட்டுவதற்கான திட்டப்பணிகளை சிந்தாதிரிப்பேட்டையில் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்த அவர், 15 மாதத்துக்குள் பணிகள் நிறைவுபெற்று பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.
Comments