ரஷ்யாவுக்கு கல்வி பயணம் மேற்கொண்டு திரும்பிய மாணவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் பெற்றோர், உறவினர்கள் வரவேற்பு

ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு ராக்கெட் அறிவியல் கல்வி பயணம் மேற்கொண்டு தமிழகம் திரும்பிய அரசு பள்ளி மாணவர்களுக்கு பெற்றோரும் உறவினர்களும் வரவேற்பு கொடுத்தனர்.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தலைமையில் 11 மாவட்டங்களில் உள்ள 25 அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள 50 பேர், ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.
ரஷ்ய ஏவுகணை தளம், ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடலில் பங்கேற்று அவர்கள் திரும்பி உள்ளனர்.
Comments