ஐ எம் ரிச் மேன்... நீங்க பிச்சைக்காரப் பசங்க.. போதை ஆசாமிக்கு தர்ம அடி..! விபத்து ஏற்படுத்தியவரை சாத்தினர்

0 1860

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மூக்கு முட்டக் குடித்து விட்டு காரை ஓட்டி சாலைத்தடுப்பில் ஏற்றிவிட்டு வேடிக்கை பார்த்தவர்களிடம் வம்பிழுத்த இரும்புக்கடை உரிமையாளரை அடித்து வெளுத்துவிட்ட சம்பவம் அரங்கேறியது.

ஓமலூர் அருகே சென்டர் மீடியனில் காரை ஏற்றிவிட்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்த போதைக்குடிகாரர் ஒருவர் போலீசாரிடம் வம்பிழுத்த காட்சிகள் தான் இவை..!

சேலம் மாவட்டம் குரங்குச்சாவடி பகுதியை சேர்ந்த இரும்புக்கடை உரிமையாளரான பாலாஜி பட்டபகலில் மூக்கு முட்ட குடித்து விட்டு தனது காரை காமலாபுரம் சாலை தடுப்பில் ஏற்றினார். காரில் பாதுகாப்பு பலூன்கள் வெடித்து வெளியேறிய நிலையில் , மப்பில் வெளியே வந்த அவரை அங்கு வந்த போலீசார் விசாரணைக்கு வரும்படி அழைத்தனர். அவர்களுடன் செல்ல மறுத்த பாலாஜி, போலீசாரை தரக்குறைவாக பேசியதுடன் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களிடம் வம்பிழுக்க ஆரம்பித்தார்

தன்னை கார் வைத்திருக்கும் பணக்காரன் என்று கூறிய பாலாஜி, வேடிக்கை பார்த்தவர்களை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரம் அடைந்தவர்கள் ஆளுக்கு நாலு அடி என்று ஒன்று கூடி பொறித்து எடுத்ததால் பஞ்சரானார் பாலாஜி

அவரை அடித்த பெரியவர் ஒருவர் தன்னிடம் 4 கார்கள் இருப்பதாக கூறி சரமாரியாக தாக்கினர்

போலீஸ்காரர் குறுக்கே வந்து தடுத்து அவரை அங்கிருந்து அழைத்துச்சென்ற நிலையில் சாலையில் செல்லும் போதே ஆபாசமாக பேசியபடி சென்றதால் , குறுக்கே புகுந்து ஒருவர் கும்மாங்குத்து விட்டதால் முள்வேலிக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது

செல்லுமிடமெல்லாம் விழுந்த அடிகளால் சற்றே போதை தெளிந்த பாலாஜி , பவ்வியமாக போலீசாருடன் காவல் நிலையம் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments