தொகுதிகள் மேம்பாடு அடைய உதவும் சங்கல்ப் சப்தா திட்டம் - பிரதமர் தொடங்கி வைத்தார்

0 1348

'சங்கல்ப் சப்தா' என்ற பெயரில் நாட்டில் உள்ள ஆர்வமுள்ள தொகுதிகளுக்கான தனித்துவமான ஒரு வார கால திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கிவைத்தார்.

குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தொகுதி அளவில் நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நாட்டிலுள்ள 329 மாவட்டங்களில் 500 லட்சியத் தொகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொடக்க விழாவில், நாடு முழுவதும் இருந்து சுமார் 3,000 பஞ்சாயத்து மற்றும் தொகுதி அளவிலான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடையே பேசிய பிரதமர் மோடி, காணொளி மூலம் மக்களிடையேயும் கலந்துரையாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments