வந்தே பாரத் ரயில்களில் உணவு, சுகாதாரம் குறித்து பயணிகள் புகார்... உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு

0 1639

வந்தே பாரத் ரயில்களில் உணவு மற்றும் கழிவறை சுகாதார வசதிகள் குறித்த பயணிகளின் புகார்களுக்கு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்களில் உள்ள கேட்டரிங் பிரிவில் கிடைக்கக் கூடிய உணவுகள் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் மூலமாக தகவல் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உணவு வேண்டாம் என்று முன்பதிவின் போது மறுக்கும் பயணிகள் பின்னர் உணவு தேவை என்று கூறினால் அவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments