கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவை தற்காலிக நிறுத்தம் - மத்திய அரசு அறிவிப்பு

0 1815

கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கனடாவில் காலிஸ்தான் பிரவினைவாதி தலைவர் நிஜார் அண்மையில் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

தூதரக உயர் அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற அந்தந்த நாடுகளால் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா தொடர்பான அனைத்துச் சேவைகளையும் நிர்வாகக் காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments