அலிபாபாவும் 40 திருடர்களை போல உள்ளது தமிழக அமைச்சரவை - ஜெயகுமார் விமர்சனம்

0 1378
அலிபாபாவும் 40 திருடர்களை போல உள்ளது தமிழக அமைச்சரவை - ஜெயகுமார் விமர்சனம்

அலிபாபவும் 40 திருடர்களை போல தமிழ்நாடு அமைச்சரவை உள்ளதால் தான் அமைச்சர்களுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறதாக முன்னாள் அமைச்சர் டி ஜெயகுமார் கூறியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் பேட்டியளித்த ஜெயக்குமார், தற்போது ஊர் முழுக்க விதவிதமான காய்ச்சல்கள் பரவிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சீமான் வழக்கில் நடிகை பகடைக் காயாக பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ள ஜெயகுமார், அரசுக்கு ஆதரவாக சீமான் இருந்திருந்தால் நடிகையின் மனு குப்பையில் போடப்பட்டு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான 1000 ரூபாய் உரிமைத் தொகை தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து கணக்கில் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments