விமானக் கண்காட்சியில் திடீரெனக் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால்... கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் 2 பேர் பலி

0 1214

ஹங்கேரியில் நடந்த விமானக் கண்காட்சியில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்தனர்.

தலைநகர் புடாபெஸ்ட் அருகே நடந்த விமான கண்காட்சியில் 1951ம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட அமெரிக்க ராணுவ T-28 Trojan ரக விமானம் பறந்து கொண்டிருந்தது.

திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் விமானியும், வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.

மேலும் ஒரு சிறுவன் உள்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments