17 வயதில் இருந்து சம்பாதித்த சொத்துக்களை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்து விட்டதாக நடிகை கௌதமி குற்றச்சாட்டு

0 8771

25 கோடி ரூபாய் மதிப்பிலான தன்னுடைய சொத்துக்களை அழகப்பன் என்பவர் மோசடி செய்து அபகரித்துள்ளதாக நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காரணத்தினாலும் தனது மகளின் எதிர்கால வாழ்வு நலன் கருதி அழகப்பன் என்பவரை நம்பி தனது சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அதிகாரம் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதனை தவறாகப் பயன்படுத்தி அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சல் அழகப்பன் உள்ளிட்ட குடும்பத்தினர் மோசடி செய்துள்ளதாகவும், இது பற்றி கேட்டால் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியுள்ளார்.

தனது 17 வயதில் இருந்து சம்பாதித்த சொத்துக்களை நம்பிக்கை மோசடி செய்து அபகரித்துள்ளதாக கௌதமி குற்றம் சாட்டியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments