சீனாவைத் தனிமைப்படுத்த விரும்பவில்லை; அதே நேரத்தில் சர்வதேச சட்டங்களை சீனா மதிக்க வேண்டும் - ஜோ பைடன்

சீனாவை தனிமைப்படுத்த எண்ணவில்லை என்றும் அது பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறட்டும் என்றும் அதே நேரத்தில் சர்வதேச சட்டதிட்டங்களை மதித்து நடந்துக் கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பின்னர் நேற்று விமானம் மூலமாக வியட்நாமின் ஹனோய் நகருக்கு சென்றார் ஜோ பைடன்.
அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சீனா சட்ட திட்டங்களை மாற்றியமைக்க முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டினார். சீனா வர்த்தக விதிகளை மாற்றிக் கொண்டு வருகிறது.
சீனாவில் அரசு அதிகாரிகள் யாரும் அமெரிக்க தயாரிப்பு செல்போனை இனி பயன்படுத்த முடியாது. இதைப்பற்றித்தான் பேச விரும்புகிறோம் என்று ஜோ பைடன் தெரிவித்தார்.
சீனாவை தனிமைப்படுத்துவதற்காக தாம் குவாட் அமைப்பில் பங்கேற்கவில்லை என்றும் பிராந்திய அமைதிதான் தமது நோக்கம் என்றும் ஜோ பைடன் கூறினார்.
Comments