ஜி 20 உச்சி மாநாடு முடிவு - 9 தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை.. நவம்பரில் மீண்டும் காணொளி வாயிலாக ஜி 20 மாநாட்டுக்கு அழைப்பு.. !!

கனடா பிரதமர் ஜஸ்டின் டிரோடோவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி , கனடாவில் இந்தியர்கள் மீது இனவெறியுடன் நடத்தப்படும் தாக்குதல்களுக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அனுமதிக்கப்படுவதற்கும் கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார். உரிய சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஜி 20 மாநாடு வெற்றிகரமாக முடிந்த போதும் பிரான்ஸ், கனடா,தென்கொரியா, பிரேசில், நைஜீரியா, நெதர்லாந்து, துருக்கி, மற்றும் ஆப்பிரிக்க யூனியன் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்ததையை பிரதமர் மோடி நேற்று ஒரே நாளில் மேற்கொண்டார்.
முன்னதாக அடுத்த ஆண்டு ஜி 20 உச்சிமாநாட்டுக்கு பிரேசில் தலைமை வகிக்க உள்ளதை முன்னிட்டு அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம் பிரதமர் மோடி ஜி 20 இலச்சினையை ஒப்படைத்தார்.
நவம்பர் மாதத்தில் காணொளி வாயிலாக மீண்டும் ஜி 20 மாநாட்டைக் கூட்டி விவாதிக்கவும் உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
Comments