வடகொரியா உருவாக்கப்பட்டதன் 75-வது ஆண்டு விழா.. அதிபர் கிம் ஜோங் உன் முன்னிலையில் துணை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு.. !!

0 1046

வடகொரியா உருவாக்கப்பட்டதன் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அந்நாட்டில் நடத்தி காட்டப்பட்ட ராணுவ அணிவகுப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தலைநகர் பியாங்யாங்-கில் அதிபர் கிம் ஜோங் உன், தமது மகளுடன் கலந்து கொண்ட விழாவில் துணை ராணுவப் படை அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

வட கொரிய தேசிய கொடியை கையில் ஏந்திக் கொண்டு விழாவில் பங்கேற்ற மக்கள், பலூன்களை பறக்கவிட்டு உற்சாகம் அடைந்தனர்.

விழாவில் எடுக்கப்பட்ட டிரோன் காட்சிகள் ஊடகத்தில் வெளியாகி பல்வேறு நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

வடகொரியா உருவாக்கப்பட்டதன் 75-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக பொது மக்களையும் அதிபர் கிம் ஜோங் உன் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் பொது மக்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments