ஈராக்கில் உயிரிழந்த நத்தத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளரின் உடல் 38 நாட்களுக்குப் பின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது

0 850

ஈராக்கில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் கட்டடத் தொழிலாளியின் உடல் 38 நாட்களுக்குப் பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான சின்னையா ஓராண்டுக்கு மேலாக ஈராக்கில் கட்டட வேலை பார்த்து வந்துள்ளார்.

தன்னுடன் பணியாற்றும் சிலர் தனது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பணம் பறிக்க முயல்வதாகவும், அதனால் வாழ விருப்பமின்றி தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் வாட்ஸப் மூலம் மனைவிக்கு காணொளி ஒன்றை அனுப்பிவிட்டு, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அளித்த தகவலின் பேரில் இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியால், விமானம் மூலம் சின்னையாவின் உடல் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊரான மூங்கில்பட்டி கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments