தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்... 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா

0 2567

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது இருபது ஓவர் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 3-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முழுமையாக வென்றது. டர்பனில் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 17 புள்ளி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments