நான் கெட்ட ராஸ்கல்.. வெடித்து சிதறினால் ஒருத்தணும் இருக்க முடியாது.. நடிகைக்கு எதிராக சீறிய சீமான்..!

0 3283

அரசியலில் தான் உயர்ந்த லட்சியத்தை தூக்கிக் கொண்டு  களத்திற்கு வருவதாகவும், தன்னை எதிர்க்க 2 லட்சுமிகளை தூக்கிக் கொண்டு வந்து சண்டையிடுவது எப்படி சரியாக இருக்கும் ? என்று கேள்வி எழுப்பி உள்ள சீமான் , தான் வெடித்துச்சிதறினால் ஒருத்தனும் இருக்க முடியாது என்று எச்சரித்துள்ளார்...

நீலகிரி மாவட்டம் உதகையில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், கருத்தியலை கருத்தியலால் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அரசியலில் தான் உயர்ந்த லட்சியத்தை தூக்கிக் கொண்டு களத்திற்கு வருவதாகவும், தன்னை எதிர்க்க 2 லட்சுமிகளை தூக்கிக் கொண்டு வந்து சண்டையிடுவது எப்படி சரியாக இருக்கும் ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்..

தான் மவுனமாக இருப்பதால் அந்த பொம்பளை சொல்றத எல்லாம் நம்பிகிட்டு இருந்தீங்கன்னா, நான் கெட்ட ராஸ்கல், வெடித்து சிதறினால் ஒருத்தனும் இருக்க முடியாது என்று கூறிய சீமான், தனது அரசியல் பயணத்தை திசை திருப்ப முயற்சி நடப்பதாக ஆவேசமானார்...

இதற்கிடையே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்த நாம்தமிழர் கட்சியினர், நடிகை விஜய லட்சுமியும், வீரலட்சுமியும் சேர்ந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுவதாக புகார் ஒன்றை அளித்தனர்

சேலம் காவல் ஆணையரிடமும் விஜயலெட்சுமி மற்றும் வீரலட்சுமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது..

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments