மரண தண்டனை மீதான கருணை மனு - குடியரசுத் தலைவருக்கே இறுதி அதிகாரம்.. புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு.. !!

0 1068

மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு கருணை மனு மீதான குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானது, அதற்கு மேல் முறையீடு கிடையாது என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

இதன்படி குடியரசுத் தலைவரின் இறுதி முடிவை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்ய முடியாது. குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் முடிவு காலதாமதம் எனக் காரணம் காட்டி மனுக்கள் தாக்கல் செய்யப்படும்போது அந்த மனுக்களை விசாரிக்க உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

மும்பை குண்டு வெடிப்பு தொடர்பான யாகூப் மேமன் மரண தண்டனை வழக்கிலும் நிர்பயா கொலை வழக்கிலும் உச்சநீதிமன்றம் நள்ளிரவு கடந்தும் விசாரணையை நடத்தியது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments