தமிழ்நாட்டைக் காப்பாற்றிவிட்டோம் ; இந்தியாவைக் காப்பாற்றத்தான் I.N.D.I.A கூட்டணி அமைந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 4038

தமிழ்நாட்டை காப்பாற்றிவிட்டோம்; இனி இந்தியாவை காப்பாற்ற வேண்டிய சூழலுக்கு வந்துள்ளோம் என்று கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பாஜகவினர் தங்கள் மீதான ஊழலை மறைக்கவே திமுக மீது அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித் துறையை விட்டு மிரட்டி பார்க்கின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.

திருவாரூரில் நடைபெற்ற நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜின் மூத்த மகள் திருமணத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், பனங்காட்டு நரியான திமுக, பாஜகவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது என்றார்.

நாடு முழுவதும் உள்ள 600 சுங்கச்சாவடிகளில் 5 சுங்கச்சாவடிகளை மட்டும் சி.ஏ.ஜி ஆய்வு செய்துள்ளதாகவும் அதில் 137 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

தமிழகத்திலுள்ள பரனூர் சுங்கச்சாவடியில் மட்டும் ஆறரை கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments