குன்றிமலை கிராமத்துக்கு நடிகர் பாலா வழங்கிய ஆம்புலன்ஸ் ஒப்படைப்பு..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குன்றி மலை கிராமத்துக்கு நடிகர் பாலா வழங்கிய ஆம்புலன்ஸ் குன்றி மலை வாழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குன்றி மலை கிராமத்திற்கு வந்த ஆம்புலன்ஸ்க்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும் பீனாட்சி வாத்திய இசைக்கேற்ப பழங்குடியின நடனமாடியும் வரவேற்றனர்.
முன்னதாக இந்தப்பகுதி மக்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை எளிதாக கிடைப்பதில்லை என்பதால் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவிப்பதாக நடிகர் பாலாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் அண்மையில் ஈரோட்டில் நடந்த விழாவில் 6 லட்சம் ரூபாய் செலவில் குன்றி மலைக்கிராம மக்கள் பயன்பாட்டிற்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கினார்.
Comments