முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை.. மருத்துவமனைக்கு சீல் வைத்த மருத்துவத்துறை அதிகாரிகள்..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
தாசன்நாயக்கம்பட்டி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் சென்றது.
மருத்துவத்துறை அதிகாரிகள் தனலட்சுமி என்பவரின் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் அவர் முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.
Comments