அன்தனன் ரிவோ-வில் விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில் நெரிசல்-தள்ளுமுள்ளு... 12 பேர் உயிரிழப்பு

0 885

மடகாஸ்கரின் தலைநகரான அன்தனன் ரிவோ-வில் உள்ள விளையாட்டரங்கில் மக்கள் நெரிசல் ஏற்பட்டு 12 பேர் நசுங்கி உயிரிழந்தனர்.

80 பேர் காயம் அடைந்தனர்.

இங்கு 11 வது இந்தியப் பெருங்கடல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய போது விளையாட்டு மைதானத்தில் புக முயன்ற மக்களிடையே பயங்கர தள்ளு முள்ளு மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

12 பேர் உயிரிழந்ததை அந்நாட்டு பிரதமர் கிறிஸ்ட்டியன் உறுதி செய்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை அவர் நேரில் சந்தித்துப் பேசினார்.

காயம் அடைந்த 80 பேரில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பிரதமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments