போக்குவரத்து விதிமுறையை மீறிய 2 இளைஞர்களுக்கு தலா ரூ.12ஆயிரம் அபராதம்

0 1106

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் போக்குவரத்து விதிமுறையை மீறிய 2 இளைஞர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது வெட்டூர்மணிமடத்தைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞர் ஹெல்மெட் அணியாமல் வந்த போது போலீசாரிடம் சிக்கினார்.

அவரை சோதனை செய்தபோது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதும், செல்போனில் அதிவேகமாக பைக் ரேசிங் ஈடுபடுவது போன்ற காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவருக்கு 12ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே காரணத்திற்காக அழகிய மண்டபத்தைச் சேர்ந்த சமீர் என்ற இளைஞருக்கும் போலீசார் அவராதம் விதித்தனர்.

மேலும் பிடிபட்ட 2 இளைஞர்களின் பெற்றோருக்கும் தலா 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments